2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஐஸூடன் கைது

Janu   / 2025 ஜூலை 22 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு நீதிமன்றத்தினால்  ஒரு திறந்த பிடியாணை  உட்பட நான்கு பிடியாணைகள் பிறபிக்கப்பட்டு , தேடப்பட்டு வந்த நபர் காத்தான்குடி பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருளுடன் திங்கட்கிழமை (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி பெரிய மீரா பள்ளிவாசல் வீதியில் வைத்து 37 வயதுடைய குறித்த நபர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 14 சிறிய பாக்கட்டுகள் கொண்ட 2250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள்  மற்றும்   நிறுவை இயந்திரம் உட்பட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன .

மேற்படி நபர் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் நான்கு பிடிவாணைகள் பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளதுடன் நீண்ட காலமாக தலைமறைவாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.   

சந்தேக  நபரை  மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 

ரீ.எல். ஜவ்பர்கான் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .