2025 மே 07, புதன்கிழமை

பிரச்சினைகளை ஆராய மட்டு. விரைகிறது குழு

வா.கிருஸ்ணா   / 2020 ஜனவரி 21 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு, ஜனாதிபதியின் குழுவொன்று, எதிர்வரும் வாரம் மட்டக்களப்புக்கு வருகைதரவுள்ளதாக, மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயலாளர் நாயகம் ச.அருண்தம்பிமுத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக மய்யத்தில் இன்று அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் நெல்லினை 50 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும்  என்ற நிலையை எடுத்திருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்த நிலை உருவாகவில்லை எனவும் வவுணதீவைச் சேர்ந்த விவசாயிகள் தனது காரியாலயத்துக்கு வருகை தந்து இதனை ஜனாதிபதிக்கு எடுத்துச்செல்லுமாறு கூறினர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருக்கு இந்த நிலையை தான் எடுத்துரைத்துள்ளதாகவும் அவர்களும் அதற்கு இணங்கி, உடனடியாக நெல் சந்தப்படுத்தும் சபை அடுத்த வாரம் நெல்லினை கொள்வனவு செய்யும் என வாக்குறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X