Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 மார்ச் 13 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமரின் கவனத்துக்கு முக்கிய மூன்று விடயங்களை முன்வைத்துள்ளதாக, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு, நேற்று (12) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இந்த பதவியை நான் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரதமரின் கவனத்துக்கு முக்கிய மூன்று விடயங்களை முன் வைத்திருக்கின்றேன்.
“முதலாவது ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது என்ற திட்டம்.
“இரண்டாவது நைற்றாவால் வழங்கப்படும் பயிற்சிகள் ஊடான சான்றிதழ்களைப் பெற்றவர்கள், அந்த சான்றிதழ்களை தம்வசம் வைத்துக் கொண்டு வெளிநாடுகளில் தொழில், மேலதிக கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டம்.
“குறிப்பாக வெளிநாடுகளிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் ஊடாக மேலதிக கல்வி வாய்ப்புகளையும் தொழில்களையும் பெறும் நிலைமைகளை உருவாக்குதல் முக்கியமானதாகும்.
“மூன்றாவதாக இன்று ஆரம்பிக்கப்பட்ட கல்விநெறிகளுக்கு 1,600 பேர் வரையில் விண்ணப்பித்துள்ளனர். எனினும், 450 பேருக்கே அனுமதிகளை வழங்க முடிந்துள்ளது.
“விண்ணப்பித்த அனைவருக்கும் பயிற்சி நெறிகள் கிடைக்கும் வகையில் எதிர்காலத்தில் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பது ஆகிய திட்டங்களை முன்மொழிந்துள்ளேன்.
“இவை குறித்து கூடிய விரைவாக பிரதமரின் வழிநடத்தலில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago