2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பிரதமரின் பதவியேற்பு: மிகக்குறுகிய காலத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு!

Freelancer   / 2022 ஜூன் 01 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

நாட்டின் சமூக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைத் தேடும் ஜனாதிபதியின் முயற்சியில் முத்தாரமாக நியமனம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவார் எனும் நம்பிக்கை தற்போது தோன்றியுள்ளது என என ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஐ.சல்மான் வஹாப் தெரிவித்தார்.

தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

இலங்கை அரசியலில் ஒரு முதுசமாக இருக்கும் தற்போதைய பிரதமர் சர்வதேச உறவிலும் நிலையான ஒரு தடத்தை ஏற்படுத்திக் கொண்டவர். குறிப்பாக பிரதமராக கௌரவ ரணில் விக்ரமசிங்க நியமனம் பெற்றவுடன் அவரால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார சிக்கனத் திட்டங்கள் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இச்சூழ்நிலையில்,  பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் கட்சிகளும்,  சுயநலப்போக்கினை கைவிட்டு மக்கள் நலனுக்காக பிரதமரின் செயற்பாடுகளுக்கு ஆதரவினை வழங்க வேண்டும்.

அவசரம் கொள்ளாது அவரின் சிந்தனை,  செயற்பாடுகளுக்கு குறுகியகால அவகாசமேனும் வழங்கி பொறுமை காக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் தான் சர்வதேச சமூகமும் இலங்கை மீது ஒரு பார்வையை செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இதனைத்தொடர்ந்து, ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் இணைந்த புதிய பயணம் அழகிய விடியலொன்றை இலங்கைத் திருநாட்டில் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையுடன் அன்னாரின் முயற்சிகள் வெற்றியடைய உளம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X