2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு முன்பாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக, இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு,கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யும் நடவடிக்கையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பக்கச்சார்பாக நடந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இளம் வீரர்களை புறந்தள்ள ஓய்வுநிலையில் உள்ளவர்களைக்கொண்டு கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தை பதிவுசெய்துள்ளதாகவும் தற்போது கழகத்துக்காக விளையாடிவரும் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது பிரதேச செயலாளருக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அவருக்கு எதிரான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

எனினும், கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் யாப்பின் அடிப்படையிலேயே இந்த பதிவு நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தரின் தவறான நடவடிக்கையே, இவ்வாறு இரண்டு குழுக்களாக பிரிந்ததற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யப்பட்டுள்ளதில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கருதுபவர்கள் அது தொடர்பில் நீதிமன்றுக்கு சென்று தெளிவடையமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X