2025 மே 14, புதன்கிழமை

‘பிரிக்க முடியாத நாட்டுக்குள் தீர்வு’

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்

பிரிக்க முடியாத நாட்டுக்குள் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் சுதந்திரமாக வாழ்வதையே எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், அந்த அடிப்படையில், புதிய அரசமைப்புக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு, நேற்று (12) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், காணி மற்றும் பொலிஸ் அதிகதரத்தை உள்ளடக்கிய தீர்வுத் திட்டம் வரவேண்டுமெனவும் எங்களது எல்லைக்குள் மக்கள் சுயநிர்ணயத்தோடு வாழவேண்டுமென்றும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வழங்காமல் மக்கள் தீர்ப்பும் நிராகரிக்கப்படுமானால், தமிழ் மக்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறையில் தீர்வு கிடைக்காது, சர்வதேச பொறிமுறையின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை காண வேண்டும் என்ற சூழ்நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .