2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பிறந்தநாள் விழா: சட்டத்தை மீறியவர் கைது

Princiya Dixci   / 2021 மே 11 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  அத்துடன், அதில் கலந்துகொண்ட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியின்றி, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, கோட்டைமுனைப் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (10) மாலை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது.

அதில் கலந்துகொண்டோரில் அதிகமானோர் முகக்கவசம் அணியாதிருந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து விழாவை ஏற்பாடு செய்தவர் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 14  நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X