Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான “பிள்ளையான்” எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விடுதலையை வலியுறுத்தி, மாபெரும் கண்டனப் பேரணியென்று, மட்டக்களப்பில் இன்று (18) முன்னெடுக்கப்பட்டது.
அவர் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், அவரை விடுதலை செய்ய வேண்டும், விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டுமென, இந்தப் பேரணியில் ஈடுபட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வலியுறுத்தினர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) தலைமையில் இப்பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பு, காந்திப்பூங்காவில் இருந்து பேரணி ஆரம்பமாகி, பிரதான வீதியூடாக நகர்புறத்தை ஊடறுத்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைச் செயலகம் வரை சென்றடைந்தது.
சிவநேசதுரை சந்திரகாந்தனின் 45ஆவது பிறந்த தின நிகழ்வுகளும் கட்சி அலுவலகத்தில் இதன்போது நடைபெற்றன.
இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், கட்சியின் மகளிர் பிரிவு தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, கடந்த 4 வருடங்களாக விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago