2025 மே 01, வியாழக்கிழமை

புதிய உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பதவியேற்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், நேற்று  (23) பதவியேற்றுக் கொண்டார்.

காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் எம்.ஐ.எம்.இர்சாத் என்பவர், தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த இடத்துக்கு புதிய உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர்  எஸ்.எச்.அஸ்பரிடம் காத்தான்குடி நகர மேயர் அலுவலகத்தில் வைத்துக் கையளித்து, உறுப்பினர் பதவியைப் பொறுப்பேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .