2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘புதிய பயிற்சி நிலையங்களை நிறுவ புதிய தலைவர் முன் வரவேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணத்தில் மேலும் பல புதிய பயிற்சி நிலையங்களை நிறுவ, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் முன்வரவேண்டுமென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (24) விடுத்துள்ள வேண்டுகோளில், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (நைற்றா), இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த தொழிற் பயிற்சிகளை வழங்குதல், தொழில் வழிகாட்டல்களை மேற்கொள்ளல், நவீன தொழில்நுட்பக் கண்டு பிடிப்புக்களுக்கு உதவுதல், புதிய தொழில் முனைவோரை உருவாக்குதல் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான நிறுவனம் என சுட்டிக்காட்டினார்.

இந்நிறுவனம் வரவு - செலவுத் திட்டத்திலே அதிகமான நிதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிறுவனமாகவும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறானதொரு நிறுவனத்தின் தலைவராக நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டதையிட்டுத் தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த ஆளுநர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தற்போதுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் புதிய பயிற்சி நெறிகளை ஆரம்பித்தல், புதிய நிலையங்களை கிழக்கு மாகாணம் மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களிலும் ஆரம்பிக்க, புதிய தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் பல புதிய பயிற்சி நிலையங்களை நிறுவ, கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில், தான் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்தாகவும் அவர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X