Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட 18 பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனால் நேற்று (21) மாலை நடத்தப்பட்டது.
1990ஆம் ஆண்டு படையினர் நடத்திய தாக்குதலில் 18 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டவர்கள் வருடாந்தம் நினைவுகூரப்பட்டுவந்த நிலையில், இவ்வாண்டு அந்த நினைவுகூரலுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, நினைவேந்தல் நிகழ்வுக்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனால் அனுஷ்டிக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஞாபகார்த்த தூபியருகே இந்த நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, சுடரேற்றி உயிர்நீர்த்தவர்களுக்கு முன்னாள் எம்.பி அஞ்சலி செலுத்தினார்.
வழமையாக இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்யும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு பொலிஸ் மூலமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிகழ்வை அவர்களால் நடத்தமுடியவில்லையென, மக்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago