Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 27ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (21) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இரவு 7 - 8 மணியளவில் புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவமும் இராணுவத்துடன் இணைந்த ஊர்காவல் படையினரும், வீடுகளின் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் 45 பேரை, தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென, கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணக்கொன இவ்வாறு அழைத்துச் சென்றவர்களில் சிலர் உயிர் தப்பியுள்ள போதிலும் அன்று நள்ளிரவு வேளை பெண்கள்இ சிறுவர்கள் உட்பட 17 பேரை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இவர்களது சடலங்கள், துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
27ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் நினைவுத் தூபியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு, மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், விசேட பிரார்த்தனை மற்றும் கூட்டமும் நடைபெற்றது.
இ.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் நி.இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, உறவுகளை இழந்த குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago