Princiya Dixci / 2021 மே 19 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவரின் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த காரும், கிரான்குளத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகி, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், காரில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரன் ரஞ்சித் (55 வயது) என்பவர் உயிரிழந்தார், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த காரின் சாரதியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago