2025 மே 14, புதன்கிழமை

புதையல் தோண்டிய இராணுவ அதிகாரி உட்பட 15 பேர் கைது

கனகராசா சரவணன்   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாழைச்சேனை, நெடியாவெளிக் காட்டுப்பகுதி மலையொன்றில், புதையல் தோண்டிய குற்றச்சாட்டில், இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 15 பேர், நேற்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் மன்னாரில் கடமையாற்றும்  இராணுவ அதிகாரி ஒருவர், இராணுவத்தினர் மூவர், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இருவர், அநுராதபுரம், தெய்யத்தைகண்டி பிரதேசங்களைச் சேர்ந்த 7 பேர், வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை மேய்த்துவரும் இருவர் உள்ளடங்குகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

தமக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, சம்பவதினத்தன்று அதிகாலை 4 மணிக்கு, குறித்த பகுதியைச் சுற்றிவளைத்த போது, அங்கு புதையல் தோண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் தோண்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கனர், துளையிடும் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களையும் மீட்டுள்ள வாழைச்சேனைப் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .