2025 மே 01, வியாழக்கிழமை

புராதன சிலையை மறைத்து வைத்திருந்த நபர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை, விநாயகபுரத்தில்  வீடொன்றில், புராதன சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில்  நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த புராதன சிலையையும் தாம் கைப்பற்றியுள்ளதாக, கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.சி.சந்தனகுமார தெரிவித்தார்.

கல்குடா கோவில் ஒன்றில் சிலையொன்று இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் அண்மையில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டபோதோ, இவ்வாறானதோர் அரிய வகை புராதான சிலையொன்றை கண்டு பிடித்துள்ளது.

இது  தொப்பிகல பிரதேசத்தில் சட்டவிரோத புதையல் அகழ்வு மூலம் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .