2025 மே 15, வியாழக்கிழமை

புற்றுநோய் விழிப்புணர்வும் புத்தக வெளியீடும்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வும் புற்றுநோய்ச் சிகிச்சை குறித்த புத்தக வெளியீடும், மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கலையரங்கில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதென, மட்டக்களப்பு புற்றுநோய் சங்கச் செயலாளரும் கிழக்குப் பல்கலைக்கழகப் பதில் உபவேந்தருமான வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

புற்றுநோய்ச் சிகிச்சை நிபுணர் கே. ஜெயகுமாரனால் எழுதப்பட்ட புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுகளைக் கொண்ட 'நோய் நாடி... நோய் முதல் நாடி...' எனும் நூலே வெளியிடப்படவுள்ளது.

இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்புத்தக வெளியீட்டுக்கு, சங்கத்தின் தலைவர் டொக்டர் என். சயளொலிபவன் தலைமை வகிக்கின்றார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பொது வைத்திய நிபுணருமான டொக்டர் வேல்முருகு விவேகானந்தராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் பொது வைத்தியர் கே. யோககாந்தி, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம், புற்றுநோய்ச் சங்கம் ஆகியவற்றின் சிரேஷ்ட உறுப்பினருமான கே. அருணகிரிநாதன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .