2025 மே 03, சனிக்கிழமை

பூரண குணமடைந்த கொவிட்-19 நோயாளிகள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

Editorial   / 2020 மே 10 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், பழுலுல்லாஹ் பர்ஹான், வ.சக்தி

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகளில், பூரண சுகமடைந்த 55 பேர், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன், இரு பஸ்களில், இன்று (10) அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களை வழியனுப்பி வைக்கும் வைபவம், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் ஏற்பாட்டில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அவர்களுக்கான உணவுப் பொருள்கள், தண்ணீர் போத்தல்கள், பழங்கள் என்பனவும் வழங்கப்பட்டதுடன், சிறுவர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர், மட்டக்களப்பு - கல்லடி 231 படைப்பிரிவின் பிரிகேடியர் பள்ளேக்கும்பர, கட்டளை அதிகாரி மேஜர் எஹெலப் பொல, இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டு, வைத்தியசாலையின் நுழைவாயிலில் தேசியக் கொடிகளை அசைத்து, அவர்களை வழியனுப்பினர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டதையடுத்து, இதுவரை 62 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில்  பூரண சுகமடைந்த கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தை, பேருவளை, மத்துகம, ஜாஎல போன்ற பகுதிகளைச் சேர்ந்த 55 பேரே, அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனைய 7 பேருக்கும் சிகிச்சைகள் இடம்பெற்றுவருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X