2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பூர்வீக நூதனசாலை மீளத் திறப்பு

Editorial   / 2021 நவம்பர் 24 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை இரண்டு வருடங்களுக்கு பின்னர் மக்கள் பாவனைக்காக நேற்று (23) மீளத் திறக்கப்பட்டது.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைக் கூறும் வகையில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இந்தப் பூர்வீக நூதனசாலை காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் இயங்கி வந்த இந்த பூர்வீக நூதனசாலையை தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம் கொண்டு செல்ல முடியாது என அறிவித்ததையடுத்து, காத்தான்குடி நகர சபை இதைப் பொறுப்பேற்றுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

கொரோனா பரவல் அச்சத் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இது மூடப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று இந்தப் பூர்வீக நூதனசாலை மீள திறக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், உலமாக்கள் நகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பூர்வீக நூதனசாலை தினமும்  காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X