Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூர் மூலவளங்களைப் பயன்படுத்தி, பெண்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்குச் சிறந்த சந்தை வாய்ப்பையும் பிரபல்யத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அம்கோர் எனப்படும் தன்னார்வ உதவி நிறுவனம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாபாரச் சந்தைகளை ஏற்பாடு செய்து வருகின்றதென, அந்நிறுவனத்தின் வாழ்வாதாரத்துக்கான கள அலுவலர் புண்ணியமூர்த்தி ஜீவிதா தெரிவித்தார்.
நாளையும் (21), நாளை மறுதினமும் (22), ஏறாவூர் ஐயங்கேணி, உதயதாரகை விளையாட்டு மைதானத்திலும் 22ஆம், 23ஆம் திகதிகளில் துறைநீலாவணை பொதுவிளையாட்டு மைதானத்திலும், இந்த வியாபாரச் சந்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் 15க்கும் மேற்பட்ட சேவை வழங்குநர் நிறுவனங்களும் பங்குபற்றுகின்றன. மேலும், பெண்கள் சுய உதவி உற்பத்திக் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும், வியாபாரச் சந்தையில் இடம்பெறவுள்ளன.
பெண்கள், அதிக வட்டிக்குக் கடன்படும் நிலையிலிருந்து அவர்களை மீட்டு கிராமிய பொருளாதார சமூக அணிதிரட்டலில் பெண்களின் வகிபாகத்தை அதிகரிக்கச் செய்வதற்காக தமது நிறுவனம், மாவட்ட மட்டத்தில் சுமார் 90 சுய உதவி முன்னேற்றக் குழுக்களை உருவாக்கியுள்ளதோடு, அதன் செயற்பாடுகள் வெற்றியளித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .