2025 மே 22, வியாழக்கிழமை

‘பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கட்டாயப்படுத்தப்படல் வேண்டும்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

‘மாகாண சபைகளிலும் பெண்களுக்கான பிரதி நிதித்துவம் கட்டாயப்படுத்தப்படல் வேண்டும்” என, பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (20) கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“இந்த நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அதேபோன்று, மாகாண சபைகளிலும் இந்த ஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்க வேண்டும்.

“இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிகம் பங்களிப்பு செய்து வருகின்றார்கள். கல்வித்துறை மாத்தரமின்றி பல்வேறு துறைகளிலும் இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெண்கள் பங்களிப்பு செய்து வரும் நிலையில் அரசியலில் மாத்திரம் பெண்கள்  புறக்கணிப்படக் கூடாது.

“அந்த வகையில்தான் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களின் போதும் மாகாண சபைகளிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படல் வேண்டும்.

“உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பத்திரத்தில் எவ்வாறு பெண்கள் 25 வீதம் உள் வாங்கப்படல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது போல மாகாண சபைகளிலும் இந்த விடயம் உள் வாங்கப்படல் வேண்டும்.

“நியமன ரீதியாக மாகாண சபைகளிலும் இந்த ஒதுக்கீடு பெண்களுக்;கு வழங்கப்படல் வேண்டும். இவைகளை இந்த நாடடின் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி அதே போன்று கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அனைவரும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

“உள்ளுராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது  போல மாகாண சபை சட்டத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து சட்டத்தினை கொண்டு வரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .