2025 மே 17, சனிக்கிழமை

பெண்கள் அமைப்பினரின் கவனயீர்ப்பு போராட்டம்

வா.கிருஸ்ணா   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் பெண்களின் பரிந்துரைக்கு அமைய, முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினை சீர்திருத்துவது தொடர்பான கோரிக்கையினை முன்வைத்து, மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (01) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“நீதிகோரும் சகோதரிகளாக நாங்கள் ஒன்றிணைவோம்” என்னும் தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினை சீர்திருத்துவதன் மூலமே முஸ்லிம் பெண்களும் சிறுமிகளும் தினமும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினை கருத்தில்கொள்ளப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

கடந்த, 30வருடகாலமாக இந்த திருத்ததினை கொண்டுவருவதற்கு முஸ்லிம் பெண்கள் குரல்கொடுத்துவருவதாகவும் ஆனால், அதனை அரசாங்கம் கருத்தில்கொள்ளாத நிலையே, இருந்துவருவதாகவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டது.

“இலங்கை பெண்களிடையே பாரபட்சம் வேண்டாம்”, “மட்டக்களப்பில் சிறுமிகளின் உரிமையை பாதுகாப்போம்”, “முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டுவருவோம்” உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .