Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 06 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) திகதி இரவு காட்டு யானை தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்த பெண் இறக்காமம் பகுதி 9 ஆம் பிரிவைச் சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் விபானி என்ற 3 பிள்ளைகளின் தாயார் என்பதுடன் அண்மையில் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு ஒன்றிற்கு செல்லவிருந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணமடைந்த நிலையில் எடுத்து செல்லப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.கருணாகரனின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரின் பிரசன்னத்துடன் மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாறுக் ஷிஹான்
3 hours ago
4 hours ago
7 hours ago
09 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
09 Aug 2025