Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.துசாந்தன், வா.கிருஸ்ணா, நடராஜன் ஹரன்
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொக்கட்டிச்சோலை, முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வசிக்கும் ஐந்து வயதுப் பிள்ளையின் தாயான 26 வயதுடைய விஜயரட்னம் தர்மினி எனும் பெண்ணே, அவரது வீட்டிலிருந்து நேற்று (09) மாலை சடலமாக மீட்கப்பட்டாரென, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் சகோதரியின் பாடசாலை நண்பரொருவர், அவ்வீட்டில் இருந்தபோதே, மர்மமான முறையில் பெண் உயிரிழந்துள்ளாரென, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, பட்டிப்பளையைச் சேர்ந்த குறித்த இளைஞன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
59 minute ago
1 hours ago