Princiya Dixci / 2021 ஜூன் 20 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு கிராமசேவகர் பிரிவு நேற்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் 6 கிராமசேவகர் பிரிவுகளில் 4 ஆயிரத்து 519 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கின்றனர் எனவும் மாவட்டச் செயலாளர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
நேற்று (19) நடைபெற்ற மாவட்டக் கொரோனா தடுப்புச் செயணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அறிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100 பேர் என்ற வீதத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர் எனவும் கடந்த வெள்ளிக்கிழமை 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையிலே பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார முறைகளை எவ்வாறு முன்னெடுப்பது என ஆராயப்பட்டு, மேற்பா கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago