2025 மே 02, வெள்ளிக்கிழமை

பொது இடங்களை குரங்குகள் ஆக்கிரமிப்பு

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனைப் பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள், பொது இடங்களில் சனநடமாட்டம் இல்லாமையால் குரங்குகள் அவ்விடங்களை ஆக்கிரமித்துள்ளதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களை விட தற்போது அதிகளவிலான குரங்குகள் வருகை தந்து, வீட்டுப் பொருள்கள், பயிர்கள், மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்துவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .