2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொதுச் சபைக் கூட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 28 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான பொதுச் சபைக் கூட்டம், காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் நாளை (29) பிற்பகல் 01 மணிக்கு நடைபெறவுள்ளது.

சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக் தலைமையில் நடைபெவுள்ள இக்கூட்டத்தில், சம்மேளனத்தின் பொதுச் சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக் கூட்டத்தின் போது, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பதுடன், இதன் தலைவர் பதவி காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு வழங்கப்படவுள்ளது. அப்பள்ளிவாசலால் நியமிக்கப்படுகின்றவர் சம்மேளனத்தின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்படவுள்ளார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் இருந்தும் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் அங்கத்தவர்களாகவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X