2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

‘பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்’

Princiya Dixci   / 2021 ஜூன் 29 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வ.சக்தி

பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில், மட்டக்களப்பு போரதீவுப்பற்று இளைஞர் கழக சம்மேளத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரத்ததான முகாம், நேற்று (28) காலை நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், இந்த இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

இந்த இரத்ததான முகாமை, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து பெருமளவான இளைஞர்கள் இரத்த தானம் வழங்கினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி, “இரத்தப் பற்றாக்குறை, மட்டக்களப்பு மாவட்டம் அன்றி முழு இலங்கையிலும் காணப்படுகின்றது.

“கடந்த சில தினங்களாக இலங்கையில் பி.சி.ஆர் எடுக்கும் வீதத்தை  அரசாங்கம் குறைத்துள்ளபோதிலும் தொற்றாளர்களின் தொகையும் இறப்பும் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

“14,000 பி.சி.ஆர் செய்து அதில் 2,000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு, 39 பேர் மரணிக்கும் நிலையில், நாட்டைத் திறந்துவிட்டு, மக்கள் தொடர்பில் பொறுப்பற்ற செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள இந்த அரசாங்கத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X