Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரகுடா, நெல்லிக்காடு பகுதியில் பொதுமயானம் கோரி, நேற்று (06) மாலை நடத்தப்பட்ட போராட்டம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பகுதித் தலைவர் ஹ.ஹரிதரனின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டது.
நெல்லிக்காடு பகுதியில் பாவனைக்கு இருந்துவந்த பொதுமயானத்தில், சடலம் புதைக்கமுடியாதென, பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அம்மயானம், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் உரிமை கோரி, அங்கு வேலியிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த பிரதேசத்தில் நேற்று இளைஞர் ஒருவர் மரணமான நிலையில், அவரது சடலத்தைப் புதைப்பதற்கு மயானம் வழங்கப்படாததையடுத்து, தமது மயானத்தை வழங்குமாறு கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதன்போது குறித்த பொதுமயாத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலிகள் பொதுமக்களால் அகற்றப்பட்டது.
இதன்போது, மரணமானவரின் சடலத்தை பொதுமயானத்துக்கு அருகிலுள்ள மரணமானவரின் காணியில் புதைப்பதற்கான நடவடிக்கையெடுப்பதாகவும் பொதுமயானத்துக்கான காணியைப் பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாகவும் ஹ.ஹரிதரனின் உறுதிமொழியையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இதேவேளை, போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன், வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர் ஆகியோரும் விரைந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.
தாம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குறித்த காணியில் உடலங்களைப் புதைத்துவரும் நிலையில் சிலர் அதனை அடைத்து காணிக்கு உரிமை கோருவதாக, பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago