Editorial / 2021 நவம்பர் 09 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்களை, டிசெம்பர் 13ஆம் திகதி வரையில் தொடந்தும் விளக்கமறியில் வைக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.என்.அப்துல்லா உத்தரவிட்டார்.
29-11-2018அன்று வவுணதீவு, வலையிறவு காவலரணில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்தப் படுகொலை தொடர்பில் 2019 ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று, தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்கொலைதாரி சஹ்ரான் ஹாஷிமினின் முக்கிய சகாக்களான சஹ்ரானின் சாரதியான முஹமது சரீப் ஆதம்பாலெப்பை கபூர் (வயது 54), கம்சா முகைதீன் இம்ரான் (வயது 31) முஹமது ஆசிம் சியாம் (வயது 34) உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு, சி.ஐ.டியினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நேற்று (08) ஆஜர்ப்படுத்த நிலையில் தொடர்ந்து அவர்களை, டிசெம்பர் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதான உத்தரவைப் பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .