Freelancer / 2022 ஜூன் 01 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கனகராசா சரவணன்)
கடந்த 3 தினங்களாக எரிவாயுவுக்காக காத்திருந்த மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எரிவாயுக்கான நம்பர் துண்டு (டோக்கன்) வழங்குமாறு பொலிசாரிடம் கோரியபோது, அதனை வழங்க முடியாது என தெரிவித்த பொலிஸ் அதிகாரிக்கும் சாணக்கியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நகர் பயினியர் வீதியில் (01) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் எரிவாயு பெறுவதற்காக வீதியில் கடந்த 3 தினங்களாக சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வெற்றுச் சிலிண்டருடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் , குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கே. கருணாகரன் ஆகியோர் சென்று அந்த மக்களுடன் கலந்துரையடினர்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மக்களிடம் எரிவாயு எதிர்வரும் 4ம் திகதி வழங்கப்படும் எனவும், கொழும்பில் எரிவாயு உள்ளதாகவும், இங்கு காத்திருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாது. எனவே எரிவாயுவை பெறுவதற்கு 3 இடங்கள் இருப்பதாகவும், ஆளும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் காரியாலயத்துக்கு முன்னாலும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னாலும், மாவட்ட செயலக காரியாலயத்துக்கு முன்னாலும் சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் கொழும்பில் இருந்து எரிவாயுவை கொண்டு வந்து தருவார்கள் என தெரிவித்தார் .
அதேவேளை கே.கருணாகரன் ஆளும்கட்சியை சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கறை இருக்குமாயின், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கூடுதலான எரிவாயுவை பெறமுடியுமானால் அவர்களின் அக்கறை முழுவதும் தங்களுக்கான பதவியை பெற்றுக் கொள்வதில் உள்ளதாக தெரிவித்தார்.
இதன் போது மட்டக்களப்பு தலைமையக பொறுப்பதிகாரி பி.கே.ஹொட்டியாராச்சி மற்றும் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மொஹமட் சென்ற போது, பாராளுமன்ற உறுப்பினர் வரிசையில் நிற்பவர்களுக்கு எரிவாயு வரும் போது பெற்றுக் கொள்வதற்காக டோக்கன் வழங்க முடியுமா? என கேட்ட போது அதற்கு சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி டோக்கன் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நீ யார் வழங்க முடியாது என அந்த பொலிஸ் அதிகாரியை கேட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதையடுத்து, அந்த அதிகாரியை அங்கிருந்து வெளியேற்றினார்.
இதனைதொடர்ந்து, அரசாங்க அதிபருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு எரிவாயுக்காக காத்திருக்க வேண்டாம் இன்று 100 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததை தொடர்ந்து , அங்கிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறினர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025