2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர் மயங்கி விழுந்து மரணம்

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நுழைவாயிலில், நேற்று (26) காலை பாதுகாப்புக் கடமையில் நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி விழுந்து மரணித்துள்ளார் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சேரன்கடவ பதியதலாவை பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய அபயவீர வர்ணப்பட்ட வெண்டிக்கே லால் ரஞ்சித் டி வில்வா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நுழைவாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, காலை 8.40 மணியளவில் திடீரென மயங்கியுள்ளார்.

உடனடியாக அவசர அம்பியூலன்ஸ் 1990 அழைக்கப்பட்டு, காலை 8.48 இற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் காலை 8.56 இற்கு அவரது உயிர் பிரிந்து விட்டதாக, பிரதேச மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் தெரிவித்தார்.

சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுப் பரிசோதனை அறிக்கையில் இறப்புக்கான காரணம்  தெரிவிக்கப்படாத நிலையில், மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .