Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, பதுளை வீதியை அண்டியுள்ள கிராம மக்களின் நன்மை கருதி, கரடியனாறு பொலிஸாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவையில், சுமார் 100 பொதுமக்கள் சேவைகளைப் பெற்றுக் கொண்டனர் என, பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ. சமரக்கோன் தெரிவித்தார்.
தூரப்புற கிராம மக்களின் நன்மை கருதி, பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைவாகவும், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் விதத்திலும், இத்தகைய பொலிஸ் நடமாடும் சேவைகள் கிரமமாக நடத்தப்படுகின்றன என, அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நடுமாடும் சேவை, உறுகாமம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடத்தப்பட்டதோடு, அசாதாரண சூழ்நிலை நிலவிய கடந்த காலத்தில் தமது உடமைகளை இழந்தவர்களும் தோட்டங்கள் அழிவடைந்தவர்களும், தமது முறைப்பாடுகளைப் பதிவுசெய்து கொண்டனர் என, சமரக்கோன் தெரிவித்தார்.
அதேபோன்று, அடையாள அட்டை தொலைந்தமைக்கான முறைப்பாடுகளும், காலங்கடந்த திருமணப் பதிவுகளும், இச்சேவையில் இடம்பெற்றதோடு, மேலும், கிராம மக்களிடையே காணப்பட்ட சிறு சிறு பிரச்சினைகளும் பொலிஸாரால் தீர்த்து வைக்கப்பட்டன.
இந்த நடமாடும் சேவையைத் தொடர்ந்து, கரடியனாறு பொலிஸாரின் அடுத்த நடமாடும் சேவை, அடுத்த இரண்டு மாதங்களில், கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புலையவெளி கிராமத்தில் நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என, அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
18 May 2025