Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 15 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் நிகழ்வு, தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று (15) நடைபெற்றது.
இனங்களிடையே ஒற்றுமையையும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில், இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.டி.திகாவத்துற தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.எஸ்.ஜயசேகர, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் உட்பட வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், மூவினங்களையும் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
31 minute ago
41 minute ago