Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்
“நாம் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படாத வகையில் வாழக்கூடாது” என, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு, இன்று (20) விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, மட்டக்களப்பு, கிரான்குளம் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலையை, உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர் ஜெயவர்தனாவின் புதல்வர் ரவி ஜெயவர்த்தவின் மனைவியால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 ஏக்கர் காணியில், சுமார் 100 மில்லியன் ரூபாய் செலவில், நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன், இவ்வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே உரையாற்றுகையிலேயே,இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,
“ஸ்ரீ சத்திய சாயிபாபா அமைப்பினரால், இப்பகுதியிலுள்ள வறிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்வதற்காக வேண்டி, இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடானது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
மனிதர்கள் இவ்வுலகில் பிறக்கின்றோம்; வாழ்க்கின்றோம்; பின்னர் இறக்கின்றோம்; இதுதான் உண்மை. இன்னும் சிலர் தாம் வாழும் காலத்தில் பேசப்படுபவர்களாகவும், பின்னர் அவர்கள் இறந்த பின்னரும் மற்றவர்களின் மனத்துக்குள் இடம்பிடத்தவர்களாகவும், ஏனையவர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர்களாகவும் இருப்பார்கள்.
எனவே, நாம் அனைவரும் எமது நாட்டுக்கும் மக்களுக்குச் சேவை செய்கின்ற பாக்கியசாலிகளாகத் திகழ வேண்டும்.
எனவே, ஸ்ரீ சத்திய சாயிபாபா அமைப்பினரால் இப்பகுதியிலுள்ள மக்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவ சேவையைப் பெற்று பயனடைய வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சமன் யட்டவர, சர்வோதய தவைர் கலாநிதி ஏ.ரி.ஆரியரத்னவின் மனைவி லீலா ஆரியரத்ன மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago