2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையில் அரையாண்டு சோதனைகள் ஆரம்பம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் பணிப்புரையின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில், இவ்வாண்டுக்கான அரையாண்டு சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களிலும் இச்சோதனைகள் இடம்பெறவுள்ளதாக, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மென்டிஸ் தெரிவித்தார்.

இதன்கீழ், முதலாவது சோதனை, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (06) காலை இடம்பெற்றது.மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிஸ் சோதகைளை நடத்தினார்.

பொலிஸாரின் உடைகள், வாகனங்கள், தங்குமிடங்கள், சாப்பாட்டு அறைகள் உட்பட பொலிஸ் நிலையக் கட்டடங்களும் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரால் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X