Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூலை 01 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
“மட்டக்களப்பு மாவட்டத்தை போசாக்கு நிறைந்த மாவட்டமாக நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மாற்றுவோம்” என, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஓட்டமாவடி - காவத்தமுனையில் நங்கூரமிடும் தள அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் மூலம், மீனவர்களுக்காக பலநோக்கு மண்டப அடிக்கல் நாட்டும் நிகழ்வு, மீனவர் சங்கத் தலைவர் எம்.எச்.சுபைர் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மீனவர்களுக்கு தற்போது தொழில் மூலம் அதிகமான இலாபங்கள் கிடைப்பது குறைவு. மீனவர்களின் தொழிலை நவீன முறையில் அபிவிருத்தி செய்து அவர்களுக்கு அதிக இலாபம் கிடைப்பதற்கான வேலைத்திட்டத்தை இந்த நல்லாட்சி முன்னெடுத்து வருகின்றது.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக வறுமைக் கோட்டின் கீழ் மக்களே வாழ்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன மதவேறுகள் இன்றி மீனவ மக்களிடம் உள்ள குறைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதுடன், கடல் தொழிலாளர்களுக்கு விரைவில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படும்.
“மீனவ தொழிலாளர்களின் நன்மை கருதி, அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு எதிர்காலத்தில் கடற்றொழில் அமைச்சின் மூலம் தொழில் முயற்சிக்கான ஊக்குவிப்பு, வீடமைப்புத் திட்டம், மீனவ குடும்பங்களின் மாணவர்களுக்கான கல்வி திட்டம் உட்பட பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
25 minute ago
39 minute ago