2025 மே 03, சனிக்கிழமை

போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

Editorial   / 2020 மே 10 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான், ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்கள், நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளனரென,  வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.வி.எம்.தாஹா தலைமையிலான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இந்நபர்களிடமிருந்து 149 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி பிரதேசத்தில் வியாபாரத்துக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் 21 வயது இளைஞனிடமிருந்து 09 மாத்திரைகளும், இரு சந்தேகநபர்களிடம் இருந்து 130 போதை மாத்திரைகளும், சந்தேகநபர் ஒருவரின் வீட்டிலிருந்து 10 போதை மாத்திரைகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X