Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூலை 10 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இளம் சமுதாயத்தினரை போதைப் பொருட் பாவனையிலிருந்து விடுவிவித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்” எனும் போதைப்பொருட் தடுப்பு வேலைத்திட்டம் பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட உளநல வைத்தியர் ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இன்று (10) விழிப்புணர்வு வேலைத்திட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில், 250 மாணவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
போதைப்பொருட்கள் பாவனையால் இன்றைய சமூகத்திற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பிலும், தொற்றா நோய்கள், தொற்று நோய்கள் பற்றியும் சிரேஷ்ட உளநல வைத்தியர் ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் இந்நிகழ்வில் விளக்கமளித்தார்.
நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த. கோபாலப்பிள்ளை, மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் பி.திருச்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .