Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மே 07 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருட்களை ஒழிக்க, ஓட்டோ சாரதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இன்று (07) தெரிவித்தார்.
காத்தான்குடி ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்தால் காத்தான்குடிக் கடற்கரையில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் என்.எம்.அபுல்பசால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர், “போதைப்பொருட்கள், தற்போது ஓட்டோக்களில் கடத்தப்படுகின்றன. அதேபோன்று, ஒரு சில ஓட்டோ சாரதிகள், போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். இதனால் சமூகச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன" என்று குறிப்பிட்டார்.
இதனாலேயே, ஓட்டோ சாரதிகளின் ஒத்துழைப்பைக் கோரிய அவர், போதைப்பொருட்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், உடனேயே பொலிஸாருக்குத் தகவலை வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
“வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு வருபவர்கள், ஓட்டோவொன்றை வாங்கி, அதனை ஓடுகின்றனர். இதுவே அவர்களின் பிரதான தொழிலாகவும் காணப்படுகின்றது.
“இதனால் நாளுக்கு நாள் ஓட்டோக்கள் அதிகரித்தே செல்கின்றன. எல்லோரும் ஓட்டோக்களை வாங்கி ஓடினால், அது சிறந்ததாக அமையாது. எனவே, ஓட்டோக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.
1 hours ago
25 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
25 Aug 2025