2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

போதைப்பொருள் வியாபாரி கைது

Princiya Dixci   / 2021 ஜூலை 28 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர், ஓட்டமாவடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (27) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, புலனய்பு பிரிவினரும் வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுர பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர், ஓட்டமாவடியில் திருமணம் முடித்துள்ளார் என்றும், இவர் பிரபல போதைவஸ்து வியாபாரி என்றும் பொலிஸார் வாழைச்சேனை மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X