Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Princiya Dixci / 2017 மே 11 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த 20 வயதுடைய இளையதம்பி தங்கராஜா என்ற இளைஞன், முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை 5.30 மணியளவில், சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தவேளை, இளைஞனை, முதலையொன்று இழுத்துச் சென்றுள்ளது. இதனையடுத்து, நணபர்களும் உறவினர்களும் தோணி மூலம் அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்த போதும் இறுதியில் அவர், சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.
சடலம், முறுத்தானையிலுள்ள குறித்த இளைஞனின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, வாழைச்சேனை பதில் நீதவான் ஏ.எல்.எம்.மனாபின் உத்தரவுக்கமைய நேற்றுக் காலை, வீட்டுக்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேசஸ்ஆனந்தன், சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், மரண விசாரணையையும் மேற்கொண்டு, சடலத்தை, பிரேத பரிசோதனைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.
யானையின் அச்சுறுத்தல் மிகுந்த முறுத்தானை பிரதேசத்தில், தற்போது முதலைகளின் அட்டசாசமும் அதிகரித்துள்ளமையினால் தாம் உயிராபத்தை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டிய பிரதேசவாசிகள், தகுந்த அதிகாரிகள், இவ்வாறான உயிரிழப்புக்களைத் தவிப்பதற்கு வழிவகை செய்யுமாறும் கோரி நிற்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
25 May 2025