2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, உறுகாமம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை இன்று திங்கட்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

உறுகாமம் , பாரதிபுரத்தைச் சேர்ந்த பழனிவேல் மனோகரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மீன்பிடிக்கச் சென்ற சமயம் காணாமல் போயிருந்த போதே இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதி விசாரணையை  கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X