2025 மே 14, புதன்கிழமை

மிளகாய்ச் செடிகளில் வாடல்நோய்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுதாவளைப் பிரதேசத்தில் மேட்டுநிலத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள மிளகாய்ச் செடிகளில் வாடல் நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், தாங்கள் நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவும் மிளகாய்ச் செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த வாடல் நோய்க்கு எந்தவித கிருமிநாசினிகளும்; இசைவாக்கம் அடையாமையினால் காய்க்கும் வேளையில் மிளகாய்ச் செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

தற்போது களுதாவளைப் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கரில்; மிளகாய்ச்; செய்கை பண்ணப்பட்டுள்ளது.

இந்த வாடல்நோயானது பங்கஸ் தாக்கம், வைரஸ், பக்டீரியா, மற்றும் நேமிட்டோ என்ற கிருமிகளின்  தாக்கங்களினால் ஏற்படுகின்றது. பங்கஸ்; தாக்கம் காரணமாக ஏற்படும் வாடல்நோயை பங்கஸை அழிக்கக்கூடிய கிருமிநாசினிகளை பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். ஆனால் வைரஸ், பக்டீரியா மற்றும் நேமிட்டோ என்ற கிருமிகளின்  தாக்கங்களினால் ஏற்படும் வாடல்நோயை இல்லாமல் செய்வதற்கு கிருமிநாசினிகள் இசைவாக்கம் அடையாது.

எனவே, ஒரே நிலப்பரப்பில் விவசாயிகள் மிளகாய்ச் செய்கையை மாத்திரம் மேற்கொள்ளாமல் கத்தரி,  வெண்டி, வெங்காயம், போன்ற மாற்று பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் பட்சத்தில், வாடல்நோயை நாளடைவில் இல்லாமல் செய்யலாமென விவசாயப் போதனாசிரியர் ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X