2025 மே 03, சனிக்கிழமை

மகளை தாக்கிய தந்தை விளக்கமறியலில்

Editorial   / 2020 மே 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில், தனது ஒன்பது வயது மகளை அலுமினியன் கம்பியால் தாக்கி காயப்படுத்திய தந்தை, மாவட்ட/வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, மே மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல், நேற்று முன்தினம் (29) உத்தரவிட்டுள்ளார்.

சகோதரர்கள் இருவர் சண்டைபிடித்த போது, அப் பிள்ளைகளின் மேற்படி தந்தை, தனது ஒன்பது வயது மகளை அலுமினியம் கம்பியால் தாக்கியதில் சிறுமி தலையில் ஏற்பட்ட காயத்துடன், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளாரென, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X