2025 மே 01, வியாழக்கிழமை

‘மகளைக் காணவில்லை; தகவல் தந்து உதவவும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மூன்று வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன தனது மகளை பல இடங்களில் தேடியும், பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என, அவரது தாயார் வெள்ளத்தம்பி கசீனாஉம்மா (வயது 55) தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ (வயது 23) என்பவர் 2017.12.29ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போனதாக, தாயார் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு தொடர்பில் விசாரித்தால் தங்களது மகளை தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர். ஆனால் இன்னும் எந்தப் பதிலும் இல்லை. எனவே, காணாமல் போன எனது மகளைக் கண்டறிந்தால் எனது 0758304796 என்ற அலைபேசி இலத்துக்கு அறியத்தருமாறு, பொதுமக்களை வேண்டுகின்றேன் என்று தாயார் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .