Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தே, அபிவிருத்தி வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுமென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
பொதுமக்களின் நிதியில் கொண்டுவரப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில், சுயநல அரசியல்வாதிகளின் விருப்பு, வெறுப்புக்காகவும், கட்சி அரசியல் விருப்பு வெறுப்புக்காகவும் கோட்டாபய ராஜபக்ஷஅரசாங்கத்தில் அமுல்படுத்த முடியாதெனவம் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில், நேற்று (24) நடத்திய ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்நதும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கம்பரெலித் திட்டத்தில், மக்களின் ஆலோசனைகளைக் கேட்காமல், அரசியல் தலைமைகள், தங்களுக்கு ஏற்பால் போல் கொங்கிரீட் வீதிகளை இட்டள்ளனர்.
“இவ்வாறு, நீர் வடிந்தோடக்கூடிய வசதிகள் இல்லாமல், இயற்கையாக நீர்வடிந்தோடும் இடங்களை வழிமறித்தும் கொங்கிரீட் வீதிகள் அமைத்தமை காரணமாக, இன்று மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
“இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடமும் தெரிவித்துள்ளோம். மக்களிடம் கருத்துகளை கேட்டுத்தான் இத்திட்டம் செயற்படுத்துவதற்கு தொடர்பான முறையான குழுக்களை அமைக்க பணித்திருக்கின்றோம்.
“தற்போதைய அரசாங்கத்தின் "நிறைவான கிராம வேலைத்திட்டம்" தொடர்பாக மக்களிடம் கருத்துகள் கேட்டுதான் திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென சுற்றுநிருபத்தில் உள்ளது. ஆனால், கம்பரெலித் திட்டத்தில் அவ்வாறு அல்ல.
“பாராபட்சமின்றி ஒவ்வொரு கிராமத்துக்கும் 02 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு, நிறைவான கிராமம் எனும் வேலைத்திட்டம், எல்லா மக்களும் சமத்துவதான அபிவிருத்தியுடன் முன்னெடுக்கப்படுகிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago