2025 மே 03, சனிக்கிழமை

மக்கள் பாதுகாப்பு கருதி வியாபாரிகளுடன் கலந்துரையாடல்

Editorial   / 2020 மே 13 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும், நோன்பு பெருநாள் வரவுள்ள நிலையிலும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, வியாபார உரிமையாளர்களுக்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், விசேட ஒன்றுகூடல், இன்று (13) நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.எஸ்.எம்.வசீம், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், வாழைச்சேனை பொலிஸ் உத்தியோகத்தர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஓட்டமாவடி சிகையலங்கார, ஆடை வியாபார நிலைய உரிமையாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சிகையலங்கார, ஆடை வியாபார நிலைய உரிமையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமெனவும் வியாபார நிலையங்களின் மக்கள் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணும் வகையில் செயற்பட வேண்டுமெனவும் இங்கு வலியுத்தப்பட்டது.

அத்தோடு, சிகையலங்கார உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு முடிகளை மாத்திரம் வெட்ட வேண்டுமே தவிர, முகச்சவரம் செய்ய முடியாது என்ற சுற்றுநிரூபத்திற்கு ஏற்ப தங்களது கடமையைச் செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்புத் தொடர்பிலான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X