Thipaan / 2016 நவம்பர் 16 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமரணத்தின தேரர், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடொன்றை செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தனக்கு, இனந்தெரியாதோரினால் அலைபேசி மற்றும் தனது விகாரையின் தொலைபேசி மூலம் இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மரண அச்சுறுத்தல் விடுத்தே இந்த தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பல முறை இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
7 minute ago
9 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
17 minute ago