Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பிலிருந்து பொத்துவிலுக்கும் பொத்துவிலிருந்து அம்பாறைக்கும் ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படுமென்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா மையம் சனிக்கிழமை (29) மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றபோதிலும், இங்கு மேலும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்குள்ள மிகப்பெரிய சவால் அதிவேக வீதியின் தேவைப்பாடாகும். கிழக்கு மாகாணத்துக்கு மிகக் குறுகிய நேரத்தில் சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு அதிவேக வீதி தேவையாக உள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்
தற்போது இந்த நாட்டில்; நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு அழகுடன் காணப்படுவது அனைவருக்கும் சந்தோஷமான விடயம். ஆனால், கிழக்கு மாகாணத்தில்; பாதைகள் இன்னமும் சரியான முறையில் அமைக்கப்படவில்லை என்றே கூறலாம். இங்குள்ள பாதைகளை சரியான முறையில் அமைக்கவேண்டிய தேவை உள்ளது' என்றார்.
'கிழக்கு மாகாண அபிவிருத்தியில் வீதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்பதினால், தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் அமைப்பில் கொழும்பிலிருந்து பொலன்னறுவைவரையான வீதியை முதலில் அமைக்க வேண்டுமென்று ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது நான் சுட்டிக்காட்டவுள்ளேன். இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால், கொழும்பிலிருந்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பொலன்னறுவையை சென்றடையலாம். இதனால், கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களுக்கும் பயணிக்கும் மக்களின் போக்குவரத்துக்கு பாரிய ஆறுதலாக இருக்கும்.' எனவும் அவர் தெரிவித்தார்.
'எதிர்வரும் நான்கு வருடங்களினுள் பாரிய சேவைகள் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும், இம்மாகாணத்தில்; சுற்றுலாத்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், ஏராளமான தொழிற்றுறைகளை உருவாக்கமுடியும். இவற்றின் மூலம் எமது மக்கள் நன்மை அடைய முடியும்' எனவும் அவர் கூறினார்.
'திருகோணமலையிலுள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
8 hours ago