Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதம்; இன்று வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு, காந்தி பூங்காவுக்கு முன்பாக அரசாங்க நியமனம் வழங்குமாறு கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவந்தனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சார்பில் அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன் நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
இந்நிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31க்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாணசபையினால் வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம்; வழங்கப்படாவிட்டால், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக உண்ணாவிரதத்தை மேற்கொள்வதுடன், கிழக்கு மாகாண சபையையும் முற்றுகையிடுவோம் என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர் ஒருவர் முதலமைச்சரிடம் தெரிவித்தார். இந்நிலையிலேயே, உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர்,; 'வேலையற்ற பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண சபையினூடாக வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதுடன், இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன். கிழக்கு மாகாண சபையினூடாக இவர்களுக்கான நியமனங்களை வழங்க துரிதமாக நடவடிக்கை எடுப்பதுடன், இவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago